Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 615)

Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்

அதிருஹ்ய தடம் க்ருதாஞ்ஜலீ: பரிசுத்தா: ஸ்வகதீர் நிரீக்ஷ்ய தா: வஸநாந்யகிலாந்யநுக்ரஹம் புநரேவம் கிரமப்யதா முதா அதிருஹ்ய தடம் க்ருத அஞ்ஜலீ: பரிசுத்தா: ஸ்வகதீ: நிரீக்ஷ்ய தா: வஸநாநி அகிலாநி அநுக்ரஹம் புந: ஏவம் கிரம் அபி அதா முதா अधिरुह्य तटं कृताञ्जलीः परिशुद्धाः स्वगतीर्निरीक्ष्य ताः । वसनान्यखिलान्यनुग्रहं पुनरेवं गिरमप्यदा मुदा

குருவாயூரப்பா! இதனால் அவர்கள் மிகுந்த சுத்தமான மனதுடன், கூப்பிய கைகளைக் கொண்டு உனக்கு அஞ்சலி செய்தவர்களாகக் கரைக்கு வந்தனர். உடனே நீ அவர்கள் ஆடைகளைக் கொடுத்தாய். மேலும் அவர்களுக்கு நீ பின் வரும் சொற்களையும் கூறினாய்.