Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 614)
Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்
அயி ஜீவ சிரம் கிசோர நஸ்தவ தாஸீரவசீகரோஷி கிம் ப்ரதிசாம்பரமம்புஜேக்ஷணேதி உதிதஸ்த்வம் ஸ்மிதமேவ தத்தவாந் அயி ஜீவ சிரம் கிசோர ந: தவ தாஸீ: அவசீ கரோஷி கிம் ப்ரதிச அம்பரம் அம்புஜ ஈக்ஷண இதி உதித: த்வம் ஸ்மிதம் ஏவ தத்தவாந் अयि जीव चिरं किशोर नस्तव दासीरवशीकरोषि किम् । प्रदिशाम्बरमम्बुजेक्षणेत्युदितस्त्वं स्मितमेव दत्तवान्
குருவாயூரப்பா! அவர்கள் உன்னை நோக்கி, “நந்தகோபரின் குழந்தையே! நீ நீண்ட நாள் நல்லபடியாக வாழ்வாய். நாங்கள் உன்னுடைய அடிமைகள் ஆவோம். எங்களை ஏன் (இன்னும் ஏற்காமல்) மனம் பேதலிக்கச் செல்கிறாய்? எங்கள் உடைகளைத் தந்துவிட மாட்டாயா?”, என்றனர். ஆனால் நீ அவர்களுக்கு உனது புன்னகையை மட்டுமே கொடுத்தாய்.