Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 611)
Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்
நியமாவஸிதௌ நிஜாம்பரம் தட ஸீமந்யவமுச்ய தாஸ்ததா யமுநா ஜல கேலநாகுலா: புரதஸ்த்வாமவலோக்ய லஜ்ஜிதா: நியம அவஸிதௌ நிஜ அம்பரம் தட ஸீமநி அவமுச்ய தா: ததா யமுநா ஜல கேலந ஆகுலா: புரத: த்வாம் அவலோக்ய லஜ்ஜிதா: नियमावसितौ निजाम्बरं तटसीमन्यवमुच्य तास्तदा । यमुनाजलखेलनाकुलाः पुरतस्त्वामवलोक्य लज्जिताः
குருவாயூரப்பா! தங்கள் நோன்பை முடித்த பின்னர் அந்தக் கோபிகைகள், தங்களுடைய ஆடைகளை நதியின் கரையில் வைத்தனர். அதன் பின்னர் அவர்கள் யமுனை நதியில் இறங்கி விளையாடி மகிழத் தொடங்கினர். அந்த நேரம், நீ அவர்கள் முன்னால் வந்தாய். உன்னைக் கண்டவுடன் வெட்கம் அடைந்தனர் அல்லவா?