Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 610)

Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்

இதி மாஸமுபாஹித வ்ரதா: தரலாக்ஷீரபிவீக்ஷ்ய தா பவாந் கருணா ம்ருதுலோ நதீதடம் ஸமயாஸீத் ததநுக்ரஹேச்சயா இதி மாஸம் உபாஹித வ்ரதா: தரல அக்ஷீ: அபிவீக்ஷ்ய தா பவாந் கருணா ம்ருதுல: நதீதடம் ஸமயாஸீத் தத் அநுக்ரஹ இச்சயா इति मासमुपाहितव्रतास्तरलाक्षीरभिवीक्ष्य ता भवान् । करुणामृदुलो नदीतटं समयासीत्तदनुग्रहेच्छया

குருவாயூரப்பா! இப்படியாக அந்தக் கோபிகைகள் ஒரு மாத காலம் விரதம் மேற்கொண்டனர். இதனால் உனக்கு அவர்கள் மீது கருணை உண்டானது. அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய நீ, அவர்கள் நீராடிக் கொண்டிருந்த யமுனை நதியின் கரைக்கு வந்தாய்.