Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 609)

Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்

தவ நாம கதா ரதா: ஸமம் ஸுத்ருச: ப்ராதருபாகதா நதீம் உபஹார சதைரபூஜயந் தயிதோ நந்தஸுதோ பவேதிதி தவ நாம கதா ரதா: ஸமம் ஸுத்ருச: ப்ராத: உபாகதா: நதீம் உபஹார கதை: அபூஜயந் தயித: நந்தஸுத: பவேத் இதி तव नामकथारतास्समं सुदृशः प्रातरुपागताः नदीम् । उपहारशतैरपूजयन् दयितो नन्दसुतो भवेदिति

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மிகவும் அழகிய கண்களை உடைய கோபிகைகள் உன்னுடைய திருநாமங்கள் மற்றும் உனது சரிதங்கள் மீது மிகவும் பற்று கொண்டிருந்தனர். இதனால் அன்றாடம் விடியற்காலைப் பொழுதில் அனைவரும் சேர்ந்து யமுனை ஆற்றுக்குச் சென்றனர். அங்கு உள்ள அந்த பார்வதியை பலவிதமான மலர்களால் பூஜித்து, “நந்தகோபரின் மகனான க்ருஷ்ணனே, எங்கள் கணவனாக அமைய வேண்டும்”, என்று வேண்டினர்.