Sriman Narayaneeyam - Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல் (ச்லோகம் 608)

Dasaka 60 - கோபிகைகள் ஆடை கவர்தல்

மதநாதுர சேதஸோSந்வஹம் பவதங்க்ரி த்வய தாஸ்ய காம்யயா யமுநா தட ஸீம்நி ஸைகதீம் தரலாக்ஷ்ய: கிரிஜாம் ஸமார்ச்சிசந் மதந ஆதுர சேதஸ: அந்வஹம் பவத் அங்க்ரி த்வய தாஸ்ய காம்யயா யமுநா தட ஸீம்நி ஸைகதீம் தரல அக்ஷ்ய: கிரிஜாம் ஸமார்ச்சிசந் मदनातुरचेतसोऽन्वहं भवदङ्घ्रिद्वयदास्यकाम्यया । यमुनातटसीम्नि सैकतीं तरलाक्ष्यो गिरिजां समार्चिचन्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னால் நிலையற்று மருண்ட பார்வை பார்க்கின்ற கோபிகைகள், உன் மீது கொண்ட காமத்தால் மனம் சஞ்சலம் அடைந்தனர். உன்னுடைய திருப்பாதங்களில் சரணம் புக விரும்பினார்கள். அதற்காக யமுனை நதிக்கரையில் அவர்கள் மணலால் பார்வதி உருவத்தை உருவாக்கி, அவளை வணங்கினர் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-22-1 முதல் x-22-27ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.