Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 607)

Dasaka 59 - வேணுகானம்

ராகஸ்தாவஜ்ஜாயதே ஹி ஸ்வபாவாந் மோக்ஷோபாயோ யத்நத: ஸ்யாந்ந வா ஸ்யாத் தாஸாம் த்வேகம் தத் த்வயம் லப்தமாஸீத் பாக்யம் பாக்யம் பாஹி மாம் மாருதேச ராக: தாவத் ஜாயதே ஹி ஸ்வபாவாந் மோக்ஷ உபாய: யத்நத: ஸ்யாத் ந வா ஸ்யாத் தாஸாம் து ஏகம் தத் த்வயம் லப்தம் ஆஸீத் பாக்யம் பாக்யம் பாஹி மாம் மாருத ஈச रागस्तावज्जायते हि स्वभावान्मोक्षोपाये यत्नतः स्यान्न वा स्यात् । तासां त्वेकं तद्द्वयं लब्धमासीद्भाग्यं भाग्यं पाहि मां मारुतेश

ஈசனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள அனைவருக்கும் காதல் என்பது இயற்கையாகவே உண்டாகிறது. மோக்ஷ உபாயம் என்பது சிலருக்கு முயற்சியினால் அமையும், அமையாமலும் போகலாம். ஆனால் கோபிகைகளுக்கு இரண்டும் ஒன்றாக அமைந்தது. (அவர்கள் க்ருஷ்ணன் மீது கொண்ட காதலே மோக்ஷ உபாயம் ஆனது). இது பெரும் பாக்கியம், பாக்கியம்! இப்படி அவர்களுக்கு அருளிய நீ, என்னைக் காப்பாற்ற வேண்டும்.***