Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 606)
Dasaka 59 - வேணுகானம்
ப்ரத்யஹம் ச புநரித்தமங்கநா: சித்த யோநி ஜநிதாதநுக்ரஹாத் பத்த ராக விவசாஸ்த்வயி ப்ரபோ நித்யமாபுரிஹ க்ருத்ய மூடதாம் ப்ரத்யஹம் ச புந: இத்தம் அங்கநா: சித்த யோநி ஜநிதாத் அநுக்ரஹாத் பத்த ராக விவசா: த்வயி ப்ரபோ நித்யம் ஆபு: இஹ க்ருத்ய மூடதாம் प्रत्यहं च पुनरित्थमङ्गनाश्चित्तयोनिजनितादनुग्रहात् । बद्धरागविवशास्त्वयि प्रभो नित्यमापुरिह कृत्यमूढताम्
ப்ரபுவே! குருவாயூரப்பா! இப்படியாக அந்தக் கோபிகைகளுக்கு மன்மதன் கருணை புரிந்தான். இதனால் அவர்கள் உன் மீது மேலும் மேலும் காதல் கொண்டனர். அதனால் அன்றாடம் செய்ய வேண்டிய செயல்களையும் மறந்து நின்றனர் அல்லவா?