Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 605)

Dasaka 59 - வேணுகானம்

ஆபிபேயமதராம்ருதம் கதா பேணு பக்த ரஸ சேஷமேகதா தூரதோ பத க்ருதம் தூராசய இதி ஆகுலா முஹுரிமா: ஸமாமுஹந் ஆபிபேயம் அதர அம்ருதம் கதா பேணு பக்த ரஸ சேஷம் ஏகதா தூரத: பத க்ருதம் தூராசய இதி ஆகுலா: முஹு: இமா: ஸமாமுஹந் आपिषेयमधरामृतं कदा वेणुभुक्तरसशेषमेकदा । दूरतो बत कृतं दुराशयेत्याकुला मुहुरिमास्समामुहन्

குருவாயூரப்பா! “உன்னுடைய புல்லாங்குழலானது உனது வாயில் உள்ள அமிர்தத்தை உண்டது. அந்தப் புல்லாங்குழல் பருகியது போக மீதம் உனது வாயில் உள்ள சொற்ப அமிர்தத்தையாவது நாங்கள் அனுபவிப்போமா? நாங்கள் வெகு தொலைவில் அல்லவா உள்ளோம்? இது என்ன பேராசை!”, என்று எண்ணி கோபிகைகள் மயக்கம் உற்றனர்.