Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 604)

Dasaka 59 - வேணுகானம்

நிர்விசங்க பவதங்க தர்சிநீ: கேசரீ: கக ம்ருகாந் பசூநபி த்வத் பத ப்ரணயி காநநம் ச தா: தந்ய தந்யமிதி நந்வமாநயந் நிர்விசங்க பவத் அங்க தர்சிநீ: கேசரீ: கக ம்ருகாந் பசூந் அபி த்வத் பத ப்ரணயி காநநம் ச தா: தந்ய தந்யம் இதி நநு அமாநயந் निर्विशङ्कभवदङ्गदर्शिनीः खेचरीः खगमृगान् पशूनपि । त्वत्पदप्रणयि काननं च ताः धन्यधन्यमिति नन्वमानयन्

குருவாயூரப்பா! உனது எழில் பொங்கும் திருமேனியை இப்படியாக எந்தவித தடையும் இன்றி தேவலோகப் பெண்களும், பறவைகளும், பசுக்களும் கண்டனர். உனது பாதங்களை அந்தப் ப்ருந்தாவனம் அன்புடன் நட்பு கொண்டது. இப்படிப்பட்ட இவர்கள் அனைவரும் மிகவும் பாக்கியசாலிகள் என்று கோபிகைகள் எண்ணினர் அல்லவா?