Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 603)

Dasaka 59 - வேணுகானம்

வேணு ரந்த்ர தரலாங்குலீதலம் தாள ஸஞ்சலித பாத பல்லவம் தத் ஸ்திதம் தவ பரோக்ஷமப்யஹோ ஸம்விசிந்த்ய முமுஹுர் வ்ரஜாங்கநா: வேணு ரந்த்ர தரல அங்குலீ தலம் தாள ஸஞ்சலித பாத பல்லவம் தத் ஸ்திதம் தவ பரோக்ஷம் அபி அஹோ ஸம்விசிந்த்ய முமுஹு: வ்ரஜ அங்கநா: वेणुरन्ध्रतरलाङ्गुलीदलं ताळसञ्चलितपादपल्लवम् । तत्स्थितं तव परोक्षमप्यहो संविचिन्त्य मुमुहुर्व्रजाङ्गनाः

குருவாயூரப்பா! உன்னுடைய அழகான விரல் நுனிகள் அந்தப் புல்லாங்குழலின் துளைகள் மீது அசைந்து விளையாடின. உனது அழகிய பாதங்கள் அந்தத் தளத்திற்கு ஏற்றாற்போல் மெதுவாக அசைந்தன. இத்தகைய காட்சியை அந்தக் கோபிகைகள் காணவில்லை. இருந்தாலும் தங்கள் மனக்கண்களால் இந்தக் காட்சியை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டு மயங்கினர். என்ன வியப்பு!