Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 600)
Dasaka 59 - வேணுகானம்
நிர்கதே பவதி தத்த த்ருஷ்டய: த்வத் கதேந மநஸா ம்ருகேக்ஷணா: வேணு நாதமுபகர்ண்ய தூரத: த்வத் விலாஸ கதயாSபிரேமிரே நிர்கதே பவதி தத்த த்ருஷ்டய: த்வத் கதேந மநஸா ம்ருகேக்ஷணா: வேணு நாதம் உபகர்ண்ய தூரத: த்வத் விலாஸ கதயா அபிரேமிரே निर्गते भवति दत्तदृष्टयस्त्वद्गतेन मनसा मृगेक्षणाः । वेणुनादमुपकर्ण्य दूरतस्त्वद्विलासकथयाऽभिरेमिरे
குருவாயூரப்பா! மான் போன்ற அழகிய விழிகளை உடைய கோபிகைகள், நீ காட்டிற்குச் சென்றதும், உன் மீது மனதை உடையவர்களாக, நீ சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வெகு தூரத்தில் கேட்கும் உனது புல்லாங்குழலின் இனிமையான இசையைக் கேட்டவுடன், உனது லீலைகளைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர்.