Sriman Narayaneeyam - Dasaka 59 - வேணுகானம் (ச்லோகம் 598)
Dasaka 59 - வேணுகானம்
த்வத் வபுர் நவ கலாய கோமலம் ப்ரேம தோஹநமசேஷ மோஹநம் ப்ரஹ்ம தத்வ பரசிந்முதாத்மகம் வீக்ஷ்ய ஸம்முமுஹுரந்வஹம் ஸ்த்ரிய: த்வத் வபு: நவ கலாய கோமலம் ப்ரேம தோஹநம் அசேஷ மோஹநம் ப்ரஹ்ம தத்வ பரசித் முத் ஆத்மகம் வீக்ஷ்ய ஸம்முமுஹு: அந்வஹம் ஸ்த்ரிய: त्वद्वपुर्नवकलायकोमळं प्रेमदोहनमशेषमोहनम् । ब्रह्मा तत्त्वपरचिन्मुदात्मकं वीक्ष्य सम्मुमुहुरन्वहं स्त्रियः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய திருமேனி புதிதாக மலர்ந்த காயாம்பூ போன்று அழகாக இருந்தது. அது அனைவரையும் மயக்கியது. உன்னிடத்தில் அன்பைப் பெருக்கியது. “ஸத் சித் ஆனந்தம்” ஆகிய மூன்றும் இணைந்தது போல் காணப்பட்டது. இப்படிப்பட்ட பரப்ரஹ்மமான உனது உருவத்தைக் கண்ட கோப ஸ்திரீகள் ஒவ்வொரு நாளும் தங்கள் மனதை உன்னிடம் பறி கொடுத்தனர்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயம் 21ன் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.