Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 597)

Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்

அத சரதமுபேதாம் தாம் பவத் பக்த சேதோ விமல ஸலில பூராம் மாநயந் காநநேஷு த்ருணமமல வநாந்தே சாரு ஸஞ்சாரயந் கா: பவநபுர பதே த்வம் தேஹி மே தேஹ ஸௌக்யம் அத சரதம் உபேதாம் தாம் பவத் பக்த சேத: விமல ஸலில பூராம் மாநயந் காநநேஷு த்ருணம் அமல வநாந்தே சாரு ஸஞ்சாரயந் கா: பவந புர பதே த்வம் தேஹி மே தேஹ ஸௌக்யம் अथ शरदमुपेतां तां भवद्भक्तचेतो - विमलसलिलपूरां मानयन् काननेषु । तृणाममलवनान्ते चारु सञ्चारयन् गाः पवनपुरपते त्वं देहि मे देहसौख्यम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! குருவாயூரின் அதிபதியே! அதன் பின்னர் உன் அடியார்களின் மனம் தெளிவாக உள்ளது போன்ற நீருடன் கூடிய சரத்காலம் வந்தது. அப்போது அந்தக் காட்டின் அழகை நன்றாக அனுபவித்துக் கொண்டும், பசுக்களைப் புதிதாக வளர்ந்த புற்களை மேயவைத்தும் கழித்தாய். இப்படியாகப் பல லீலைகள் செய்த நீ, எனக்கு உடல் ஆரோக்கியத்தை அளிப்பாயாக.***