Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 595)

Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்

ததநு ஜலத ஜாலைஸ்த்வத் வபுஸ்துல்ய பாபி: விகஸதமல வித்யுத் பீதவாஸோ விலாஸை: ஸகல புவந பாஜாம் ஹர்ஷதாம் வர்ஷ வேலாம் க்ஷிதிதர குஹரேஷு ஸ்வைர வாஸீ வ்யநைஷீ: ததநு ஜலத ஜாலை: த்வத் வபு: துல்ய பாபி: விகஸத் அமல வித்யுத் பீதவாஸ: விலாஸை: ஸகல புவந பாஜாம் ஹர்ஷதாம் வர்ஷ வேலாம் க்ஷிதிதர குஹரேஷு ஸ்வைர வாஸீ வ்யநைஷீ: तदनु जलदजालैस्त्वद्वपुस्तुल्यभाभि - र्विकसदमलविद्यूत्पीतवासोविलासैः । सकलभुवनभाजां हर्षदां वर्षवेलां क्षितिधरकुहरेषु स्वैरवासी व्यनैषीः

குருவாயூரப்பா! ( அந்த கோடைக் காலத்தைத் தொடர்ந்து) பின்னர் உனது கரிய திருமேனி போன்று நிறத்தைக் கொண்டிருந்த மேகங்கள் காணப்பட்டன. அவை நீ உனது இடுப்பில் அணிந்துள்ள பொன்னாடை போன்று மின்னல்களைக் கொண்டிருந்தன. இவை அனைத்தும் ஒன்று கூடி உலகினை மகிழ்விக்கும் மழைக் காலத்தை உண்டாக்கின. அப்போது நீ குகைகளில் அமர்ந்து மகிழ்ந்தாய்.