Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 594)

Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்

த்வயி விமுகமிவோச்சைஸ்தாப பாரம் வஹந்தம் தவ பஜந வதந்த: பங்கமுச்சோஷயந்தம் தவ புஜவதுதஞ்சந் பூரி தேஜ: ப்ராவஹம் தப ஸமயமநைஷீர் யாமுநேஷு ஸ்தலேஷு த்வயி விமுகம் இவ உச்சை: தாப பாரம் வஹந்தம் தவ பஜந வதந்த: பங்கம் உச்சோஷயந்தம் தவ புஜவத் உதஞ்சந் பூரி தேஜ: ப்ராவஹம் தப ஸமயம் அநைஷீ: யாமுநேஷு ஸ்தலேஷு त्वयि विमुखविमोच्चैस्तापभारं वहन्तं तव भजनवदन्तः पङ्कमुच्छोषयन्तम् । तव भुजवदुदञ्चत् भूरितेजःप्रवाहं तपसमयमनैषीर्यामुनेषु स्थलेषु

குருவாயூரப்பா! நீ அந்த யமுனைக் கரையில் இருந்தபோது கோடைகாலம் எப்படி இருந்தது? உன்னிடம் பக்தி இல்லாதவர்களின் உள்ளத்தில் உண்டாகும் துன்பத்தின் வெப்பம் போன்றும், மனதில் உள்ள பாபம் என்றும் சேற்றைக் காய வைக்கும் தன்மை உடைய உனது ஸத்ஸங்கங்களின் வெப்பம் போன்றும், உன்னுடைய கைகளில் இருந்து வெளிப்படும் ஒளியைப் போன்றும் இருந்தது.