Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 593)

Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்

ஜய ஜய தவ மாயா கேயமீசேதி தேஷாம் நுதிபிருதித ஹாஸோ பத்த நாநா விலாஸ: புநரபி விபிநாந்தே ப்ராசர: பாடலாதி ப்ரஸவ நிகர மாத்ர க்ராஹ்ய கர்மாநுபாவே ஜய ஜய தவ மாயா கா இயம் ஈச இதி தேஷாம் நுதிபி: உதித ஹாஸ: பத்த நாநா விலாஸ: புந: அபி விபிந அந்தே ப்ராசர: பாடல ஆதி ப்ரஸவ நிகர மாத்ர க்ராஹ்ய கர்ம அநுபாவே जय जय तव माया केयमीशेति तेषां नुतिभिरुदितहासो बद्वनानाविलासः । पुनरपि विपिनान्ते प्राचरः पाटलादि - प्रसवनिकरमात्रग्राह्यघर्मानुभावे

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஆயர் சிறுவர்கள் உன்னை நோக்கி, “உனக்கு எப்போதும் வெற்றியே! என்னே உனது மாயை! ஈசனே!”, என்று வணங்கினர். நீ அவர்கள் கூறியதைக் கேட்டு புன்னகையுடன் நின்றாய். அந்தக் காட்டில் பூத்திருந்த பாதிரி போன்ற மலர்களால் மட்டுமே அது கோடை காலம் என்று உணர முடிந்தது. (உனது மாயை மூலம் அந்த வெப்பத்தினை மறைத்தாய்) பின்னர் அவர்களுடன் அந்தக் காட்டில் மேலும் சுற்றித் திரிந்தாய்.