Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 592)

Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்

அலமலமதி பீத்யா ஸர்வதோ மீலயத்வம் த்ருசமிதி தவ வாசா மீலிதாக்ஷேஷு தேஷு க்வ நு தவ தஹநோSஸௌ ருத்ர முஞ்ஜாடவீ ஸா ஸபதி வவ்ருதிரே தே ஹந்த பாண்டீர தேசே அலம் அலம் அதி பீத்யா ஸர்வத: மீலயத்வம் த்ருசம் இதி தவ வாசா மீலித அக்ஷேஷு தேஷு க்வ நு தவ தஹந: அஸௌ ருத்ர முஞ்ஜா அடவீ ஸா ஸபதி வவ்ருதிரே தே ஹந்த பாண்டீர தேசே अलमलमतिभीत्य सर्वतो मीलयध्वं दृशमिति तव वाचा मीलिताक्षेषु तेषु । क्वनु दवदहनोऽसौ कुत्र मुञ्जाटवी सा सपदि ववृतिरे ते हन्त भण्डीरदेशे

குருவாயூரப்பா! உடனே நீ அவர்களை நோக்கி, “பயப்பட வேண்டாம். பயந்தது போதும். உங்கள் கண்களைச் சற்று மூடிக் கொள்ளுங்கள்”, என்றாய், உனது சொற்களைக் கேட்ட அவர்களும் தங்கள் கண்களை மூடிக் கொண்டனர். பின்னர் கண்களைத் திறந்தபோது, என்ன வியப்பு! காட்டுத்தீ எங்கே, அந்த காடு எங்கே, எதுவும் இல்லை, அவர்கள் பாண்டீர மரத்தின் அடியில் நின்றிருந்தனர்.