Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 591)

Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்

ஸகல ஹரிதி தீப்தே கோர பாங்கார பீமே சிகிநி விஹத மார்க்கா அர்த்த தக்தா இவார்த்தா: அஹஹ புவந பந்தோ பாஹி பாஹீதி ஸர்வே சரணமுபகதாஸ்த்வாம் தாப ஹர்த்தாரமேகம் ஸகல ஹரிதி தீப்தே கோர பாங்கார பீமே சிகிநி விஹத மார்க்கா அர்த்த தக்தா இவ ஆர்த்தா: அஹஹ புவந பந்தோ பாஹி பாஹி இதி ஸர்வே சரணம் உபகதா: த்வாம் தாப ஹர்த்தாரம் ஏகம் सकलहरिति दीप्ते घोरभाङ्कारभीमे शिखिनि विहतमार्गा अर्धदग्धा इवार्ताः । अहह भुवनबन्धो पाहि पाहीति सर्वे शरणमुपगतास्त्वां तापहर्तारमेकम्

குருவாயூரப்பா! பெருத்த ஓசையுடன் அந்தத் தீயானது நான்கு திசைகளிலும் பரவி எரிந்தது. அதனால் ஆயர் சிறுவர்களின் பாதை தடைப்பட்டது. அனைவரும் உன்னை நோக்கி, “க்ருஷ்ணா! உலகத்தின் பந்துவாக உள்ளவனே! காப்பாற்று! காப்பாற்று!”, என்று அனைத்துத் துன்பங்களையும் நீக்கும் உன்னிடம் சரணம் அடைந்தனர் அல்லவா?