Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 590)

Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்

ததநு ஸஹ ஸஹாயைர் தூரமந்விஷ்ய சௌரே கலித ஸரணி முஞ்ஜாரண்ய ஸஞ்ஜாத கேதம் பசு குலமபிவீக்ஷ்ய க்ஷிப்ரமாநேதுமாராத் த்வயி கதவதி ஹீ ஹீ ஸர்வதோSக்நி: ஜஜ்ரும்பே ததநு ஸஹ ஸஹாயை: தூரம் அந்விஷ்ய சௌரே கலித ஸரணி முஞ்ஜ அரண்ய ஸஞ்ஜாத கேதம் பசு குலம் அபிவீக்ஷ்ய க்ஷிப்ரம் ஆநேதும் ஆராத் த்வயி கதவதி ஹீ ஹீ ஸர்வத: அக்நி: ஜஜ்ரும்பே तदनु सह सहायैर्दूरमन्विष्य शौरे गलितसरणिमुञ्जारण्यसञ्जातखेदम् । पशुकुलमभिवीक्ष्य क्षिप्रमानेतुमारात् त्वयि गतवति ही ही सर्वतोऽग्निर्जजृम्भे

குருவாயூரப்பா! அப்போது நீ ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து பசுக்களைத் தேடினாய் அல்லவா? சற்று நேரம் கழித்து முஞ்ஜிக் காட்டின் நடுவே அவை உள்ளதைக் கண்டாய். அவற்றை மீட்டு வர அவற்றின் அருகே சென்றபோது, நான்கு திசைகளிலும் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது அல்லவா?