Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 589)

Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்

அநதிகத நிதாக க்ரௌர்ய ப்ருந்தாவநாந்தாத் பஹிரிதமுபயாதா: காநநம் தேநவஸ்தா: தவ விரஹ விஷண்ணா: ஊஷ்மல க்ரீஷ்ம தாப ப்ரஸர விஸரதம்பஸ்யாகுலா: ஸ்தம்பமாபு: அநதிகத நிதாக க்ரௌர்ய ப்ருந்தாவந அந்தாத் பஹி: இதம் உபயாதா: காநநம் தேநவ: தா: தவ விரஹ விஷண்ணா: ஊஷ்மல க்ரீஷ்ம தாப ப்ரஸர விஸரத் அம்பஸி ஆகுலா: ஸ்தம்பம் ஆபு: अनधिगतनिदाघक्रौर्यबृन्दावनान्तात् - बहिरिदमुपयाताः काननं धेनवस्ताः । तव विरहविषण्णा ऊष्मलग्रीष्मताप - प्रसरविसरदम्भस्याकुलाः स्तम्भमापुः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வெயிலின் வெப்பம் என்றால் என்ன என்பதை ப்ருந்தாவனத்தில் இருந்தபோது அந்தப் பசுக்கள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இப்போது இந்த காட்டை அடைந்த காரணத்தாலும், வெயிலின் கொடுமையாலும். உன்னைப் பிரிந்த மன வருத்தத்தாலும் அவை தாகம் கொண்டவையாக, செயலற்று நின்றன.