Sriman Narayaneeyam - Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள் (ச்லோகம் 588)

Dasaka 58 - காட்டுத் தீ, பருவ வர்ணனைகள்

த்வயி விஹரண லோலே பால ஜாலை: ப்ரலம்ப ப்ரமதந ஸவிலம்பே தேநவ: ஸ்வைர சாரா: த்ருண குதுக நிவிஷ்டா தூரதூரம் சரந்த்ய: கிமபி விபிநமைஷிகாக்யமீஷாம் பபூவு: த்வயி விஹரண லோலே பால ஜாலை: ப்ரலம்ப ப்ரமதந ஸ விலம்பே தேநவ: ஸ்வைர சாரா: த்ருண குதுக நிவிஷ்டா தூர தூரம் சரந்த்ய: கிம் அபி விபிநம் ஐஷீக ஆக்யம் ஈஷாம் பபூவு: त्वयि विहरणलोले बालजालैः प्रलम्ब - प्रमथनसविळम्बे धेनवः स्वैरचाराः । तृणकुतुकनिविष्टा दूरदूरं चरन्त्यः किमपि विपिनमैषीकाख्यमीषांबभूवुः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ ப்ரலம்பாசுரனைக் கொன்றபோது, அதனை ஆயர் சிறுவர்கள் கண்டு மகிழ்வதற்காகச் சற்று தாமதம் செய்தாய். இதற்கிடையே உன்னுடைய பசுக்கள் தங்கள் விருப்பப்படி புல்லைத் தேடி சென்றன. இவ்விதமாகச் சென்றபோது அவை ஐஷீகம் என்ற காட்டை அடைந்தன.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயங்கள் 19 மற்றும் 20 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.