Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 585)
Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்
உச்சதயா தைத்ய தநோஸ்த்வத் முகமாலோக்ய தூரதோ ராம: விகதபயோ த்ருட முஷ்ட்யா ப்ருச துஷ்டம் ஸபதி பிஷ்டவாநேநம் உச்சதயா தைத்ய தநோ: த்வத் முகம் ஆலோக்ய தூரத: ராம: விகத பய: த்ருட முஷ்ட்யா ப்ருச துஷ்டம் ஸபதி பிஷ்டவாந் ஏநம் उच्चतया दैत्यतनोस्त्वन्मुखमालोक्य दूरतो रामः । विगतभयो दृढमुष्ट्या भृशदुष्टं सपदि पिष्टवानेनम्
குருவாயூரப்பா! அந்த அசுரனின் உடல் உயரமாக இருந்தது. இதனால் அவன் நீண்ட தூரத்தில் இருந்தாலும், அவன் தோளில் அமர்ந்திருந்த பலராமனால் உனது திருமுகத்தைப் பார்க்க முடிந்தது. உடனே பலராமனின் பயம் நீங்கியது. தன்னுடைய திடகாத்ரமான முட்டியால் அசுரனை வதம் செய்தான்.