Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 582)
Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்
கல்பித விஜேத்ரு வஹநே ஸமரே பரயூதகம் ஸ்வ தயித தரம் ஸ்ரீதாமாநமதத்தா: பராஜிதோ பக்த தாஸதாம் ப்ரதயந் கல்பித விஜேத்ரு வஹநே ஸமரே பரயூதகம் ஸ்வ தயித தரம் ஸ்ரீதாமாநம் அதத்தா: பராஜித: பக்த தாஸதாம் ப்ரதயந் कल्पितविजेतृवहने समरे परयूथगं स्वदयिततरम् । श्रीदामानमधत्थाः पराजितो भक्तदासतां प्रथयन्
குருவாயூரப்பா! விளையாட்டில் தோற்றவர்கள், வென்றவர்களைத் தோளில் தூக்கிச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்தாய். அப்போது, ஸ்ரீதாமன் என்ற உனது ப்ரியமான தோழனிடம் நீ தோற்றாய். நீ பக்தர்களுக்கு அடிமையாக இருப்பதை வெளிப்படுத்தும்படி அவனை உனது தோள்களில் தூக்கிச் சென்றாய் அல்லவா?