Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 581)

Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்

கோபாந் விபஜ்ய தந்வந் ஸங்கம் பலபத்ரகம் பவத்கமபி த்வத் பலபீரும் தைத்யம் த்வத் பல கதமந்வமந்யதா பகவந் கோபாந் விபஜ்ய தந்வந் ஸங்கம் பலபத்ரகம் பவத்கம் அபி த்வத் பல பீரும் தைத்யம் த்வத் பல கதம் அந்வமந்யதா பகவந் गोपान् विभज्य तन्वन् सङ्घं बलभद्रकं भवत्कमपि । त्वद्बलभीरुं दैत्यं त्वद्बलगतमन्वमन्यथा भगवन्

பகவானே! குருவாயூரப்பா! நீ இடையர் சிறுவர்களை இரண்டு கோஷ்டிகளாகப் பிரித்தாய். ஒரு கோஷ்டிக்குப் பலராமனைத் தலைவன் என்றும், மற்றொரு கோஷ்டிக்கு நீ தலைவனாகவும் இருந்தாய். உனது பலத்தை முன்பே அறிந்திருந்ததால் பயந்த அசுரனை உனது கோஷ்டியில் இருக்க வைத்தாய்.