Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 580)

Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்

ஜாநந்நப்யவிஜாநந்நிவ தேந ஸமம் நிபத்த ஸௌஹார்த்த: வட நிகடே படு பசுப வ்யாபத்தம் த்வந்த்வ யுத்தமாரப்தா: ஜாநந் அபி அவிஜாநந் இவ தேந ஸமம் நிபத்த ஸௌஹார்த்த: வட நிகடே படு பசுப வ்யாபத்தம் த்வந்த்வ யுத்தம் ஆரப்தா: जानन्नप्यविजानन्निव तेन समं निबद्धसौहार्दः । वटनिकटे पटुपशुपव्याबद्धं द्वन्द्वयुद्धमारब्धाः

குருவாயூரப்பா! இடையனைப் போல் வேடம் தரித்து வந்த அசுரனை, அவன் அசுரன் என்று நீ அறிந்திருந்தும் அறியாதவன் போல் நடித்தாய். அவனுடன் நட்புடன் பழகினாய். அந்த மரத்தடியில் மிகவும் புத்திசாலிகளான ஆயர் சிறுவர்களுடன் மற்போர் விளையாட்டைத் துவக்கினாய்.