Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 579)
Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்
தாவத் தாவக நிதந ஸ்ப்ருஹயாலு: கோபமூர்த்திர்ரதயாலு: தைத்ய: ப்ரலம்ப நாமா ப்ரலம்ப பாஹும் பவந்தமாபேதே தாவத் தாவக நிதந ஸ்ப்ருஹயாலு: கோப மூர்த்தி: அதயாலு: தைத்ய: ப்ரலம்ப நாமா ப்ரலம்ப பாஹும் பவந்தம் ஆபேதே तावत्तावकनिधनस्पृहयालुर्गोपमूर्तिरदयालुः । दैत्यः प्रलम्बनामा प्रलम्बबाहुं भवन्तमापेदे
குருவாயூரப்பா! அப்போது ப்ரலம்பன் என்ற பெயர் உடைய அசுரன் அங்கு வந்தான். அவன் எப்படி இருந்தான்? அவன் இரக்கம் என்பதே இல்லாதவனாகவும், உன்னைக் கொல்வதற்கு மிகவும் ஆவல் உடையவனாகவும், முழங்கால் வரை தொங்கும் கைகளை உடையவனாகவும், ஆயர் சிறுவன் போல் வேடம் தரித்தும் இருந்தான்.