Sriman Narayaneeyam - Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம் (ச்லோகம் 577)
Dasaka 57 - ப்ரலம்பாசுரன் வதம்
ராமஸக: க்வாபி திநே காமத பகவந் கதோ பவாந் விபிநம் ஸுநுபிரபி கோபாநாம் தேநுபி: அபி ஸம்வ்ருத: லஸத் வேஷ: ராமஸக: க்வ அபி திநே காமத பகவந் கத: பவாந் விபிநம் ஸுநுபி: அபி கோபாநாம் தேநுபி: அபி ஸம்வ்ருத: லஸத் வேஷ: रामसखः क्वापि दिने कामद भगवन् गतो भवान् विपिनम् । सूनुभिरपि गोपानां धेनुभिरभिसंवृतो लसद्वेषः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பகவானே! ஒருநாள் நீ பலராமனுடனும், இடையர் தோழர்களுடனும், பசுக்களுடனும் காட்டிற்குச் சென்றாய். அப்போது பல ஆபரணங்களை அணிந்து கொண்டு மிகவும் அழகாக இருந்தாய்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-18-17 முதல் x-18-32 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.