Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 575)
Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்
ப்ரபுதிதாநத பாலய பாலய இதி உதயதார்த்த ரவாந் பசு பாலகாந் அவிதுமாசு பபாத மஹாநலம் கிமிஹ சித்ரமயம் கலு தே முகம் ப்ரபுதிதாந் அத பாலய பாலய இதி உதயத் ஆர்த்த ரவாந் பசு பாலகாந் அவிதும் ஆசு பபாத மஹாநலம் கிம் இஹ சித்ரம் அயம் கலு தே முகம் प्रबुधितानथ पालय पालयेत्युदयदार्तरवान् पशुपालकान् । अवितुमाशु पपाथ महानलं किमिह चित्रमयं खलु ते मुखम्
குருவாயூரப்பா! உடனே விழித்து எழுந்த ஆயர்கள் அனைவரும், “காப்பாற்று காப்பாற்று”, என்று அலறினார்கள். அவர்களைக் காப்பதற்காக அங்கு உண்டான அந்த பெரும் காட்டுத்தீயை முழுவதுமாக நீ பருகிவிட்டாய் அல்லவா? இதில் வியப்பு என்னவென்றால் அக்னி பிறந்ததே உனது வாயில்தான் அன்றோ?