Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 574)

Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்

நிசி புநஸ்தமஸா வ்ரஜ மந்திரம் வ்ரஜிதுமக்ஷம ஏவ ஜநோத்கரே ஸ்வபிதி தத்ர பவச்சரணாச்ரயே தவ க்ருசாநுரருந்த ஸமந்தத: நிசி புந: தமஸா வ்ரஜ மந்திரம் வ்ரஜிதும் அக்ஷம ஏவ ஜந உத்கரே ஸ்வபிதி தத்ர பவத் சரண ஆச்ரயே தவ க்ருசாநு: அருந்த ஸமந்தத: निशि पुनस्तमसा व्रजमन्दिरं व्रजितुमक्षम एव जनोत्करे । स्वपति तत्र भवच्चरणाश्रये दवकृशानुररुन्ध समन्ततः

குருவாயூரப்பா! இதற்குள் நன்றாக இருட்டி விட்டது. ஆகையால் உங்களால் அன்று இரவு ப்ருந்தாவனம் செல்ல இயலவில்லை. எனவே இடையர்கள் அனைவரும் உனது திருவடிகளையே துணையாகக் கொண்டு அங்கேயே படுத்து உறங்கினர். அப்போது திடீரென்று அனைத்துத் திசைகளிலும் பெரும் தீ சூழ்ந்து கொண்டது.