Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 573)
Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்
பணி வதூ ஜந தத்த மணி வ்ரஜ ஜ்வலித ஹார துகூல விபூஷித: தடகதை: ப்ரமதாச்ரு விமிச்ரிதை: ஸமகதா: ஸ்வ ஜநைர் திவஸாவதௌ பணி வதூ ஜந தத்த மணி வ்ரஜ ஜ்வலித ஹார துகூல விபூஷித: தட கதை: ப்ரமதா அச்ரு விமிச்ரிதை: ஸமகதா: ஸ்வ ஜநை: திவஸ அவதௌ फणिवधूजनदत्तमणिव्रजज्वलितहारदुकूलविभूषितः । तटगतैः प्रमदाश्रुविमिश्रितैः समगथाः स्वजनैर्दिवसावधौ
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! காளியனின் மனைவிகள் உனக்கு அளித்த இரத்தினக் கற்களாலும் ஒளி பொருந்திய மாலைகளாலும், பட்டு ஆடைகளாலும் நீ நன்றாக அலங்கரித்துக் காணப்பட்டாய். பின்னர் யமுனை நதியின் கரையில் ஆனந்தக் கண்ணீருடன் காத்திருந்த உனது சுற்றத்தாரிடம் சென்று சேர்ந்தாய் அல்லவா?