Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 571)
Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்
பணி வதூ கண பக்தி விலோகந ப்ரவிகஸத் கருணாகுல சேதஸா பணி பதிர்பவதாSச்யுத ஜீவித: த்வயி ஸமர்ப்பித மூர்த்திரவாநமத் பணி வதூ கண பக்தி விலோகந ப்ரவிகஸத் கருணா ஆகுல சேதஸா பணி பதி: பவதா அச்யுத ஜீவித: த்வயி ஸமர்ப்பித மூர்த்தி: அவாநமத் फणिवधूजनभक्तिविलोकनप्रविकसत्करुणाकुलचेतसा । फणिपतिर्भवताच्युत जीवितस्त्वजि समर्पितमूर्तिरवानमत्
அடியார்களை நழுவ விடாதவனே! குருவாயூரப்பா! அவர்கள் உன்னைத் துதித்ததைக் கண்டதும் அவர்கள் உனது மீது வைத்துள்ள பக்தியைக் கண்டு மனம் நெகிழ்ந்தாய். இதனால் காளியனுக்கு உயிரை அளித்தாய். அவன் தனது உடலை உனக்கே என்று ஒப்படைத்து உன் திருவடிகளின் கீழே வணங்கினான் அல்லவா?