Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 569)

Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்

த்வதவபக்ந விபுக்ந பணா கணே கலித சோணித சோணித பாதஸி பணி பதாவவஸீததி ஸந்நதா: ததபலாஸ்தவ மாதவ பாதயோ: த்வத் அவபக்ந விபுக்ந பணா கணே கலித சோணித சோணித பாதஸி பணி பதௌ அவஸீததி ஸந்நதா: தத் அபலா: தவ மாதவ பாதயோ: त्वदवभग्नविभुग्नफणागणे गलितशोणितशोणितपाथसि । फणिपताववसीदति सन्नतास्तदबलास्तव माधव पादयोः

குருவாயூரப்பா! மாதவனே! நீ நடனம் ஆடும்போது மிதிபட்டதால் நசுங்கிய பல தலைகளை உடையவனும், தனது இரத்தத்தை அந்த மடு நிறைய நிரப்பியவனும், ஆகிய காளியன் சோர்ந்தான். அப்போது அவன் மனைவிகள் உனது கால்களில் விழுந்து வணங்கினர் அல்லவா?