Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 568)
Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்
நமதி யத்யதமுஷ்ய சிரோ ஹரே பரிவிஹாய ததுந்நதமுந்நதம் பரிமதந் பத பங்க ருஹா சிரம் வ்யஹரதா: கர தால மநோஹரம் நமதி யத் யத் அமுஷ்ய சிர: ஹரே பரிவிஹாய தத் உந்நதம் உந்நதம் பரிமதந் பத பங்க ருஹா சிரம் வ்யஹரதா: கர தால மநோஹரம் नमति यद्यदमुष्य शिरो हरे परिविहाय तदुन्नतमुन्नतम् । परिमथन् पदपङ्करुहा चिरं व्यहरथाः करताळमनोहरम्
குருவாயூரப்பா! ஸ்ரீஹரியே! ஆயிரம் தலைகள் உடைய அவனது தலைகளில் எவை உன்னை வணங்கிப் பணிந்தனவோ அவற்றை நீ விட்டு விட்டாய். உன்னைப் பணியாமல் மேலே எழுந்த தலைகளை உனது தாமரை போன்ற சிறிய பாதங்களால் மிதித்தபடியும், கைகளில் தாளம் போட்டுக் கொண்டும் தொடர்ந்து ஆடினாய்.