Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 565)

Dasaka 55 - காளிய நர்த்தனம்

அதிருஹ்ய தத: பணி ராஜ பணாந் நந்ருதே பவதா ம்ருது பாதருசா கல சிஞ்ஜித நூபுர மஞ்ஜு மிலத் கர கங்கண ஸங்குல ஸங்க்வணிதம் அதிருஹ்ய தத: பணி ராஜ பணாந் நந்ருதே பவதா ம்ருது பாத ருசா கல சிஞ்ஜித நூபுர மஞ்ஜு மிலத் கர கங்கண ஸங்குல ஸங்க்வணிதம் अधिरुह्य ततः फणिराजफणान्ननृते भवता मृदुपादरुचा । कलशिञ्चितनूपुरमञ्चुमिलत्करकङ्कणसंकुलसंक्वणितम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் உனது சிறிய குழந்தைக் கால்களைக் கொண்டு காளியனின் படங்கள் நிறைந்த தலை மீது ஏறி நின்று நடனம் ஆடினாய். அப்போது உன் திருவடிகளில் இருந்த கொலுசுகளும், திருக்கரங்களில் இருந்த கிண்கிணிகளும் இனிமையாக உனது நடனத்திற்கு ஏற்ப தாளம் போட்டன அல்லவா?