Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 563)

Dasaka 55 - காளிய நர்த்தனம்

அவிலோக்ய பவந்தமதாகுலிதே தட காமிநி பாலக தேநு கணே வ்ரஜ கேஹ தலேSப்யநிமித்த சதம் ஸமுதீக்ஷ்ய கதா யமுநாம் பசுபா: அவிலோக்ய பவந்தம் அத ஆகுலிதே தட காமிநி பாலக தேநு கணே வ்ரஜ கேஹ தலே அபி அநிமித்த சதம் ஸமுதீக்ஷ்ய கதா யமுநாம் பசுபா: अविलोक्य भवन्तमथाकुलिते तटगामिनि बालकधेनुगणे । व्रजगेहतलेऽप्यनिमित्तशतं समुदीक्ष्य गता यमुनां पशुपाः

குருவாயூரப்பா! அப்போது கரையில் நின்றிருந்த உனது நண்பர்களான ஆயர் சிறுவர்கள் உன்னைக் காணாமல் வருத்தம் கொண்டனர். அதே நேரத்தில் ப்ருந்தாவனத்தில் பல கெட்ட சகுனங்கள் தோன்றியதால், உனக்கு ஆபத்து என்று எண்ணியபடி பல கோபர்கள் யமுனை நதியின் கரைக்கு விரைந்தனர்.