Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 562)

Dasaka 55 - காளிய நர்த்தனம்

ஜ்வலதக்ஷி பரிக்ஷரதுக்ர விஷ: ச்வஸநோஷ்மபர: ஸ மஹாபுஜக: பரிதச்ய பவந்தமநந்த பலம் ஸமவேஷ்டயதஸ்புட சேஷ்டமஹோ ஜ்வலத் அக்ஷி பரிக்ஷரத் உக்ர விஷ: ச்வஸந் ஊஷ்மபர: ஸ மஹாபுஜக: பரிதச்ய பவந்தம் அநந்த பலம் ஸமவேஷ்டயத் அஸ்புட சேஷ்டம் அஹோ ज्वलदक्षिपरिक्षरदुग्रविषश्वसनिष्मभरः स महाभुजगः । परिदश्य भवन्तमनन्तबलं समवेष्टयदस्फुटचेष्टमहो

குருவாயூரப்பா! காண்பவர்கள் கண்கள் கூசும்படி ஒளி வீசும் கண்களை உடையவனும், எரிக்கும்படியான மூச்சுக்காற்றை விடுபவனும் ஆகிய அந்த காளியன் உன்னைத் தீண்டினான். மிகுந்த வலிமை உடைய நீயோ சிறிதும் அசையாமல் இருந்தாய். அதனைக் கண்ட அவன் கோபத்துடன் தனது உடலால் உன்னைச் சுற்றினான்.