Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 560)
Dasaka 55 - காளிய நர்த்தனம்
அத திக்ஷு விதிக்ஷு பரிக்ஷுபித ப்ரமிதோதர வாரி நிநாத பரை: உதகாதுதகாதுரகாதிபதி: த்வதுபாந்தமசாந்த ருஷாSந்தமநா: அத திக்ஷு விதிக்ஷு பரிக்ஷுபித ப்ரமித உதர வாரி நிநாத பரை: உதகாத் உதகாத் உரக அதிபதி: த்வத் உபாந்தம் அசாந்த ருஷா அந்தமநா: अथ दिक्षु विदिक्षु परिक्षुभितभ्रमितोदरवारिनिनादभरैः । उदकादुदगादुरगाधिपतिस्त्वदुपान्तमशान्तरुषान्धमनाः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தக் குளத்தில் இருந்த நீர் அனைத்து திசைகளிலும் கலங்கியபடி, சுழல்கள் அதிகரித்து அதனால் பெருத்த ஓசையும் உண்டானது. இந்த ஓசையைக் கேட்ட காளியன் மிகுந்த கோபம் கொண்டான். அறிவு மங்கியவனாக நீரில் இருந்து கிளம்பி உன்னிடம் வந்தான்.