Sriman Narayaneeyam - Dasaka 55 - காளிய நர்த்தனம் (ச்லோகம் 559)
Dasaka 55 - காளிய நர்த்தனம்
புவநத்ரய பார ப்ருதோ பவதோ குரு பார விசும்பி விஜ்ரும்பி ஜலா பரிமஜ்ஜயதி ஸ்ம தநுச்சதகம் தடிநீ ஜடிதி ஸ்புட கோஷவதீ புவந த்ரய பார ப்ருத: பவத: குரு பார விசும்பி விஜ்ரும்பி ஜலா பரிமஜ்ஜயதி ஸ்ம தநு: சதகம் தடிநீ ஜடிதி ஸ்புட கோஷவதீ भुवनत्रयभारभृतो भवतो गुरुभारविक्रम्पिविजृम्भिजला । परिमज्जयति स्म धनुश्शतकं तटिनी झटिति स्फुटघोषवती
குருவாயூரப்பா! மூன்று உலகங்களின் பாரத்தையும் தாங்கி உள்ளதால் உனது பாரம் அதிகமாக இருந்தது. இதனால் நீ குதித்தவுடன் உனது சுமை தாங்காமல் அந்த மடு நடுங்கியது. அதனால் அலைகள் பெரிய ஓசையுடன் வெகுவாக உயரத்தில் எழும்பின. அவை நிலத்தின் நூறு வில் அளவு தூரம் வந்தது அல்லவா?