Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 556)
Dasaka 54 - காளியன் சரிதம்
ஏவம் பக்தாந் முக்த ஜீவாநபி த்வம் முக்தாபாங்கைரஸ்த ரோகாம்ஸ்தநோஷி தாத்ருக் பூத ஸ்பீத காருண்ய பூமா ரோகாத் பாயா வாயுகேஹாதிநாத ஏவம் பக்தாந் முக்த ஜீவாந் அபி த்வம் முக்த அபாங்கை: அஸ்த ரோகாத் தநோஷி தாத்ருக் பூத ஸ்பீத காருண்ய பூமா ரோகாத் பாயா வாயுகேஹ அதிநாத एवं भक्तान् मुक्तजीवानपि त्वं मुग्धापाङ्गौरस्तरोगांस्तनोषि । तादृग्भूतस्फीतकारुण्यभूमा रोगात्पाया वायुगेहाधिनाथ
குருவாயூரப்பா! இப்படியாக உன்னை அடைந்த அடியார்கள், அவர் உயிர் இல்லாதவர்களாக இருந்தாலும் உனது அழகிய கருணை மிகுந்த கடைக்கண் பார்வையால் அவர்களைப் பிழைக்க வைத்து, நோய் என்பதே இல்லாமல் ஆக்கி விடுகின்றாய். அந்த அளவு காருண்யம் கொண்ட நீ எனது பிணிகளில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.***