Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 553)
Dasaka 54 - காளியன் சரிதம்
கிம் கிம் ஜாதோ ஹர்ஷ வர்ஷாதிரேக: ஸர்வாங்கேஷ்வித்யுத்திதா கோப ஸங்கா: த்ருஷ்ட்வாSக்ரே த்வாம் த்வத் க்ருதம் தத் விதந்த: த்வாம் ஆலிங்கந் த்ருஷ்ட நாநா ப்ரபாவ: கிம் கிம் ஜாத: ஹர்ஷ வர்ஷ அதிரேக: ஸர்வ அங்கேஷு இதி உத்திதா கோப ஸங்கா: த்ருஷ்ட்வா அக்ரே த்வாம் த்வத் க்ருதம் தத் விதந்த: த்வாம் ஆலிங்கந் த்ருஷ்ட நாநா ப்ரபாவ: किं किं जातो हर्षवर्षातिरेकः सर्वाङ्गेष्वित्युत्थिता गोपसङ्घाः । दृष्ट्वाऽग्रे त्वां त्वत्कृतं तद्विदन्तस्त्वामालिङ्गन् दृष्टनानाप्रभावाः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மயக்கத்தில் இருந்த எழுந்த இடைச்சிறுவர்கள், “என்ன நடந்தது? என்ன நடந்தது? எங்கள் உடலில் ஆனந்தம் பெருகி உள்ளதே!”, என்று வியந்தனர். உன்னைக் கண்டனர். பலமுறை உனது செயல்களைக் கண்டிருந்த அவர்கள் இம்முறையும் உன்னால் ஏதோ அதிசயம் நடந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். உன்னை நன்றாகத் தழுவிக் கொண்டனர் அல்லவா?