Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 552)

Dasaka 54 - காளியன் சரிதம்

நச்யஜ்ஜீவாந் விச்யுதாந் க்ஷ்மாதலே தாந் விச்வாந் பச்யந்நச்யுத த்வம் தயார்த்ர: ப்ராப்யோபாந்தம் ஜீவயாமாஸித த்ராக் பீயூஷாம்போ வர்ஷிபி: ஸ்ரீகடாக்ஷை: நச்யத் ஜீவாந் விச்யுதாந் க்ஷ்மாதலே தாந் விச்வாந் பச்யந் அச்யுத த்வம் தயார்த்ர: ப்ராப்ய உபாந்தம் ஜீவயாமாஸித த்ராக் பீயூஷ அம்ப: வர்ஷிபி: ஸ்ரீகடாக்ஷை: नश्यज्जीवान् विच्युतान् क्ष्मातले तान् विश्वान् पश्यन्नच्युत त्वं दयार्द्रः । प्राप्योपान्तं जीवयामासिथ द्राक् पीयूषाम्भोवर्षिभिः श्रीकटाक्षैः

அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! குருவாயூரப்பா! அந்த நீரைக் குடித்ததால் அனைவரும் தரையில் உயிர் இழந்து வீழ்ந்தனர். அவர்களைக் கண்ட நீ, அவர்கள் அருகில் சென்று, அமிர்தம் போன்ற உனது கடைக்கண் பார்வையை அவர்கள் மீது செலுத்தி, அவர்கள் உயிரை மீட்டாய்.