Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 549)

Dasaka 54 - காளியன் சரிதம்

தஸ்மிந் காலே காலிய: க்ஷ்வேல தர்பாத் ஸர்பாராதே: கல்பிதம் பாகமச்நந் தேந க்ரோதாத் த்வத் பதாம்போஜ பாஜா பக்ஷ க்ஷிப்தஸ்தத் துராபம் பயோSகாத் தஸ்மிந் காலே காலிய: க்ஷ்வேல தர்பாத் ஸர்ப ஆராதே: கல்பிதம் பாகம் அச்நந் தேந க்ரோதாத் த்வத் பத அம்போஜ பாஜா பக்ஷ க்ஷிப்த தத் துராபம் பய: அகாத் तस्मिन् काले कालियः क्ष्वेळदर्पात् सर्पारातेः कल्पितं भागमश्नन् । तेन क्रोधात्त्वत्पदाम्भोजभाजा पक्षक्षिप्तस्तद्दुरापं पयोऽगात्

குருவாயூரப்பா! ஒரு முறை காளியன் என்ற ஒரு பெரிய நாகம், தன்னிடம் அதிகமாக விஷம் உள்ளது என்று கர்வம் கொண்டதாக, கருடனுக்காக வைக்கப்பட்டிருந்த உணவை உட்கொண்டது. அப்போது, உன்னுடைய திருவடிகளில் எப்போதும் பக்தி கொண்டவனான கருடன் அவன் மீது கோபம் கொண்டு, தன்னுடைய சிறகுகளால் அவனை அடித்தான். கருடனுக்குப் பயந்த காளியன், கருடன் வரமுடியாத இடமான (ஸௌபரியின் சாபத்தால்) காளிந்தி மடுவிற்கு வந்தான்.