Sriman Narayaneeyam - Dasaka 54 - காளியன் சரிதம் (ச்லோகம் 547)

Dasaka 54 - காளியன் சரிதம்

த்வத் ஸேவோத்கஸ்ஸௌபரிர் நாம பூர்வம் காலிந்த்யந்தர் த்வாதசாப்தம் தபஸ்யந் மீநவ்ராதே ஸ்நேஹவாந் போகலோலே தார்க்ஷ்யம் ஸாக்ஷாதைக்ஷதாக்ரே கதாசித் த்வத் ஸேவ உத்க: ஸௌபரி: நாம பூர்வம் காலிந்தி அந்த: த்வாதச ஆப்தம் தபஸ்யந் மீநவ்ராதே ஸ்நேஹவாந் போகலோலே தார்க்ஷ்யம் ஸாக்ஷாத் ஐக்ஷத அக்ரே கதாசித் त्वत्सेवोत्कस्सौभारिर्नाम पूर्वं कालिन्द्यन्तर्द्वादशाब्दं तपस्यन् । मीनव्राते स्नेहवान् भोगलोले तार्क्ष्यं साक्षादैक्षताग्रे कदाचित्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில், ஸௌபரி என்னும் ஒரு முனிவர் இருந்தார். அவர் உன்னைக் குறித்து காளிந்தி என்ற குளத்தில் பன்னிரண்டு ஆண்டு கடுந்தவம் புரிந்தார். அந்தக் குளத்தில் இன்பமாக இருந்த சிறிய மீன்களுடன் நட்பாக இருந்தார். இப்படி இருக்கையில் ஒருநாள் அவர் கருடனைக் கண்டார்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-15-47 முதல் x-15-52, அத்யாயம் 16 முழுவதும் மற்றும் அத்யாயம் 17 முழுவதும் ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகமும், அடுத்த தசகமும் உள்ளது.