Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 546)

Dasaka 53 - தேனுகாசுரன் வதம்

ஹதோ ஹதோ தேநுக இத்யுபேத்ய பலாந்யதத்பிர் மதுராணி லோகை: ஜயேதி ஜீவேதி நுதோ விபோ த்வம் மருத்புராதீச்வர பாஹி ரோகாத் ஹத: ஹத: தேநுக: இதி உபேத்ய பலாநி அதத்பி: மதுராணி லோகை: ஜய இதி ஜீவ இதி நுத: விபோ த்வம் மருத்புராதீச்வர பாஹி ரோகாத் हतो हतो धेनुक इत्युपेत्य फलान्यदद्भिर्मधुराणि लोकैः । जयेति जीवेति नुतो विभो त्वं मरुत्पुराधीश्वर पाहि रोगात्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! ஆயர்கள் அனைவரும், “தேனுகன் மடிந்தான்! மடிந்தான்!”, என்று கூறியபடி உன்னிடம் வந்தனர். நீ கொடுத்த சுவையான பழங்களை உண்டு மகிழ்ந்தனர். நீ எப்போதும் ஜெயத்துடன் வாழ வேண்டும் என்று உன்னை வாழ்த்தினர். இப்படிப்பட்ட நீ என்னை பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.***