Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 544)
Dasaka 53 - தேனுகாசுரன் வதம்
தவாவதாரஸ்ய பலம் முராரே ஸஞ்ஜாதமத்யேதி ஸுரைர்நுதஸ்த்வம் ஸத்யம் பலம் ஜாதமிஹ இதி ஹாஸீ பாலை: ஸமம் தால பலாந்யபுங்க்தா: தவ அவதாரஸ்ய பலம் முராரே ஸஞ்ஜாதம் அத்ய இதி ஸுரை: நுத: த்வம் ஸத்யம் பலம் ஜாதம் இஹ இதி ஹாஸீ பாலை: ஸமம் தால பலாநி அபுங்க்தா: तवावतारस्य फलं मुरारे सञ्जातमद्येति सुरैर्नुतस्त्वम् । सत्यं फलं जातमिहेति हासी बालैस्समं तालफलान्यभुङ्क्थाः
குருவாயூரப்பா! முராசுரனை அழித்தவனே! தேவர்கள் உன்னை வணங்கி, “க்ருஷ்ணா! உனது அவதாரத்திற்கு உரிய பலன் இப்போதுதான் ஏற்பட்டது”, என்றனர். நீயும் அதனைக் கேட்டு கிண்டலாகச் சிரித்து, “ஆம், எனக்கு இப்போதுதான் பலன் (பழம்) கிடைத்தது”, என்றாய். இப்படிக் கூறியபடி உன் நண்பர்களுடன் பழங்களை உண்டாய்.