Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 543)
Dasaka 53 - தேனுகாசுரன் வதம்
விநிக்நதி த்வய்யத ஜம்புகௌகம் ஸநாமதத்வாத் வருணஸ்ததாநீம் பயாகுலோ ஜம்புக நாமதேயம் ச்ருதி ப்ரஸித்தம் வ்யதிதேதி மந்யே விநிக்நதி த்வயி அத ஜம்புக ஓகம் ஸநாமதத்வாத் வருண: ததாநீம் பய ஆகுல: ஜம்புக நாமதேயம் ச்ருதி ப்ரஸித்தம் வ்யதித இதி மந்யே विनिघ्नति त्वय्यथ जम्बुकौघं सनामकत्वाद्वरुणस्तदानीम् । भयाकुलो जम्बुकनामधेयं श्रुतिप्रसिद्धं व्यधितेति मन्ये
குருவாயூரப்பா! நீ அந்த நரிக்கூட்டத்தை (ஜம்புகம்) அழிக்கத் தொடங்கினாய். இதனைக் கண்ட ஜம்புகன் என்னும் அதே பெயரையுடைய வருணதேவன் பயந்து விட்டான். இதனால் தன்னுடைய அந்தப் பெயர் வெளியில் தெரியாவண்ணம் மறைத்து வேதங்களில் மட்டுமே இருக்கும்படிச் செய்தான் என்று நான் நினைக்கிறேன், இது சரியா?