Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 541)

Dasaka 53 - தேனுகாசுரன் வதம்

ஸமுத்யதோ தேநுக பாலநேSஹம் கதம் வதம் தைநுகமத்ய குர்வே இதீவ மத்வா த்ருவமக்ரஜேந ஸுரௌக யோத்தாரமஜீகதஸ்த்வம் ஸமுத்யத: தேநுக பாலநே அஹம் கதம் வதம் தைநுகம் அத்ய குர்வே இதி இவ மத்வா த்ருவம் அக்ரஜேந ஸுர ஓக யோத்தாரம் அஜீகத: த்வம் समुद्यतो धैनुकपालनेऽहं वधं कथं धैनुकमद्य कुर्वे । इतीव मत्वा ध्रुवमग्रजेन सुरौघयोद्धारमजीघतस्त्वम्

குருவாயூரப்பா! அப்போது நீ, “நான் தேனுக கூட்டத்தை (பசுக்கள்) காப்பதற்காக உள்ளேன். இவ்விதம் உள்ளபோது நான் எப்படி தேனுக வதம் ( தேனுகன் என்ற அசுரவதம்) செய்வது?”, என்று நினைத்தாய். இதனால்தானோ அந்த அசுரனை உனது அண்ணன் மூலம் வதம் செய்தாய்?