Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 540)

Dasaka 53 - தேனுகாசுரன் வதம்

உத்கால தாலீ நிவஹே த்வதுக்த்யா பலேந தூதேSத பலேந தோர்ப்யாம் ம்ருது: கரச்சாப்யபதத் புரஸ்தாத் பலோத்கரோ தேநுக தாநவோSபி உத்கால தாலீ நிவஹே த்வத் உக்த்யா பலேந தூதே அத பலேந தோர்ப்யாம் ம்ருது: கர: ச அப்யபதத் புரஸ்தாத் பல உத்கர: தேநுக தாநவ: அபி उत्तालतालीनिवहे त्वदुक्त्या बलेन धूतेऽथ बलेन दोर्भ्याम् । मृदुः खरश्चाभ्यपतत्पुरस्तात् फलोत्करो धेनुकदानवोऽपि

குருவாயூரப்பா! உன்னுடைய சொற்களைக் கேட்ட பலராமன், தனது இரண்டு கைகளாலும் அங்கு இருந்த பனைமரங்களை உலுக்கத் தொடங்கினான். இதனால் பழுத்த மென்மையான பழங்களும், பழுக்காத கடினமான பழங்களும் கீழே விழுந்தன. அவற்றின் ஓசையைக் கேட்ட தேனுகன் ஓடி வந்தான் அல்லவா?