Sriman Narayaneeyam - Dasaka 53 - தேனுகாசுரன் வதம் (ச்லோகம் 539)
Dasaka 53 - தேனுகாசுரன் வதம்
கதாபி ராமேண ஸமம் வநாந்தே வநச்ரியம் வீக்ஷ்ய சரந் ஸுகேந ஸ்ரீதாம நாம்ந: ஸ்வ ஸகஸ்ய வாசா மோதாதகா தேநுக காநநம் த்வம் கதாபி ராமேண ஸமம் வந அந்தே வநச்ரியம் வீக்ஷ்ய சரந் ஸுகேந ஸ்ரீதாம நாம்ந: ஸ்வ ஸகஸ்ய வாசா மோதாத் அகா: தேநுக காநநம் த்வம் कदापि रामेण समं वनान्ते वनश्रियं वीक्ष्य चरन् सुखेन । श्रीदामनाम्नः स्वसखस्य वाचा मोदादगा धेनुककाननं त्वम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒருநாள் நீ பலராமனுடன் சேர்ந்து காட்டினுள் அதன் அழகைக் கண்டு ரசித்தபடியே சுற்றி வந்தாய். அந்த நேரத்தில் ஸ்ரீதாமன் என்னும் உன் நண்பன் கூறியதைக் கேட்டு, தேனுகன் என்ற அசுரன் வசித்து வந்த காட்டிற்குச் சென்றாய் அல்லவா?